முகப்பு தொடக்கம்

புதைத்துக் கரக்கும் பொருளாளர் வெஞ்சொற் பொருமறலி
கதைத்துக் கரக்குங் குமமுலை பாகன்மெய் கண்டடியார்
பதைத்துக் கரக்குஞ் சிறிதா வுருகும் பழமலையான்
வதைத்துக் கரக்குஞ் சரமீர்ந் தவன்றரும் வாழ்விலரே.
(38)