|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
பெருந்தகைமை தனக்கன்றி மற்றையபூ வினுக்கிலையென் பெற்றி யன்றோ திருந்துதட மதிற்குவளை குமுதமொரோ ருறுப்பினையே சிவண நிற்ப முருந்துநகை யுமைகணவன் றிருவெங்கை யானையாயுன் முகம்பொற் றாள்கை புரைந்திடுதற் கரவிந்த மொருதாளி னின்றுதவம் புரித றானே.
|
(17) |
|