முகப்பு தொடக்கம்

போயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும்
        பொன்றுலகம் விட்டமலனார்
    பூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய
        பொன்பெண்மண் ணாசைநெறியில்
பாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப்
        பத்தாறு தத்துவமறப்
    பகுதியொடு ணர்த்துதத் துவமுமிறை யஞ்சனீ
        பாரென்னு மான்மிகமுமே
மேயசடு லிங்கமுட னாறங்க மாகமொரு
        மெய்யனுக் கிரகநிலையும்
    விமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு
        மிக்கசத் தியசுத்தமும்
ஆயவெழு வகைநெறியி னாவியிடை யிலகுமர
        னபிடேக மாடியருளே
    அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை
        யபிடேக மாடியருளே.
(7)