|
போற்ற வருக வடிமையேம் புகழ வருக நறியமலர் புனைய வருக வருண்மாரி பொழிய வருக வடிகடலை ஏற்ற வருக மவுனமொழி யிசைப்ப வருக வெமதுளத்தி னிருப்ப வருக வறங்கடலை யெடுப்ப வருக நீற்றழகு தோற்ற வருக வெங்கண்மய றுரப்ப வருக கொடுங்காமந் துடைப்ப வருக கூற்றுவலி தொலைப்ப வருக பிறவிநோய் மாற்ற வருக வறிவுருவில் வைப்ப வருக வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(7) |
|