|
போக்கு வரவு குறிகுணங்கள் புணர்தல் பிரித லிரவுபகல் புறமுள் ளகன்ற நிரஞ்சனமாய்ப் புகறற் கரிய வவாச்சியமாய் நீக்கு முருவக் கலையாகி நிறைந்த வநாதி யாதியாய் நிகரி லகர முதலனவாய் நின்று பலமந் திரமுநால் வாக்கு மறையு மாகமமு மற்றுங் கலைகள் பற்பலவு மண்ணும் புனலுங் கதழெரியும் வளியும் விசும்பும் பேருலகும் ஆக்கும் விளையாட் டுடைக்குரிசி லடியேஞ் சிற்றி லழியேலே யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
|
(4) |
|