|
போரொன்று வஞ்சமன வெஞ்சொற் கொடுந்தகுவர் புரமொன் றிரண்டுமொருதன் பொருவென்ற வஞ்செழுத் தோதுமவர் வினைநிலைமை போல்வதற் கேகுமருளால் வாரொன்று குங்குமக் கொங்கையந் திருமாது மனையடைத் துந்திறந்தும் வந்துலா வருமிரண் டாழியும் பொய்யாத வாய்மைநன் னெறியந்தணர் நேரொன்று நெஞ்சவஞ் சாலைதனி லகலாது நிற்குமா வீரிரண்டு நிரையிதழ்த் தாமரைத் தவிசினுறை யொருபாகு நிகழ்வுற்று மேவுறுபெருந் தேரொன்று கொண்டவிறை யுளமகிழ வெம்மைய சிறுதே ருருட்டியருளே சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.
|
(4) |
|