|
படுமத்தமிழுக் குவந்தவிறை விடுமத்தமிழுக் குவந்தவிறை பண்டங்கரிய வடிவாமன் கண்டங்கரிய வடிவாமன் சடையற்படுமம் புயனிசையான் றொடையற்படுமம் புயனிசையான் சம்புவனமாக் குணர்வாக னம்புவனமாக் குணர்வாகன் கடலைக்கலக்கு மலைவில்லா னுடலைக்கலக்கு மலைவில்லான் கங்கைப்பதியன் பரையானான் வெங்கைப்பதியன் பரையானான் அடலைப்புரத்தங் கணையெய்தா னுடலைப்புரத்தங் கணையெய்தான் அன்பினிகழ வணங்கீரே துன்பினிகழ வணங்கீரே.
|
(7) |
|