முகப்பு தொடக்கம்

 
பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பரம யோகி யென்றுடம்பிற் பாதி யொருத்தி கொளக்கொடுத்துப்
       பகர்வுற் றறநன் மகனையடும் பாத கத்திற் குடன்படுத்தித்
தருமி தானென் றெருதேறிச் சாந்த னென்று புரமெரித்துத்
       தம்பி ரானென் றொருவற்குச் சந்து மகளிர் பானடந்து
பெருமை யாள னென்றுபோய்ப் பேய்க்கூத் தாடிச் சின்மயனாம்
       பெயர்பெற் றவையி னம்பியாற் பித்த னாகிப் புனிதனெனாச்
சிரமு மாலை என்புமரீஇத் திரிந்த முரண்கொள் செயலெல்லாம்
       தீர்வான் வந்த சிவஞான தேவற் கிலையொப் பாவாரே.
(49)