முகப்பு தொடக்கம்

படைத்திடுந் தொழிலோன் மறைச்சடங் கியற்றப்
      பாவியேன் மனத்தினும் வலிய
பன்மணி குயின்ற செம்பொனம் மியினின்
      பதமலர் வைத்தக லாமல்
இடத்தினி லுனைவைத் தருளுதன் முன்னோ
      வியற்பகை மனைவியை யிரந்தா
னிளம்பிறை சூடு மிறையவன் பின்ன
      ரெங்ஙனம் போயிரந் திடுவான்
கொடுத்தெனி லிடுபொன் புலவனுக் காரூர்க்
      குளத்தினிற் பழமலை யன்று
கொடுத்தது நானே கொடுத்தன னென்னிற்
      குளித்தகல் பவர்க்குளத் தெல்லாங்
கிடைத்திட வொருகண் டருமெனக் கிதுசெய்
      கின்றதற் புதங்கொலோ வென்னக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(8)