முகப்பு தொடக்கம்

முடிவ றுஞ்சக சீவ மாபர மெனம யங்குறு மயலெலா
       முகைநெ கிழ்ந்தளி பாடு மாலையின் முதிர்சி னங்கொளு மரவுபோல்
நெடிய வன்றறி காணு மோர்மக னெனவ ழிந்தொரு பிரமமா
       நிலையி னின்றிடு ஞானி யேவலி னொழுகி நின்றிடு மவர்கடாம்
ஒடிவ றும்பர போக மேவின ருணரு மங்கவர் நிலையிலே
       யுறுவர் பின்பென வேத மோதிடு முறையு ணர்ந்தனை யலைகொலோ
மடிவு றுஞ்சிவ யோகி யோடுற வருக வம்புலி வருகவே
       மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.
(9)