முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
முனிப்புலி தொழுசிதம் பரங்கண் ணுற்றவர்
       முழைப்புலி முழங்குமவ் வருணை யங்கிரி
நினைப்பவ ரமலவா ரூர்ப்பி றப்பவர்
       நிகழ்த்துறு காசியிற் சென்றி றப்பவர்
தனிப்பெரு முத்தியை யடைவர் தாங்களே
       தலைப்படு குவருயர் பதமுன் கச்சியை
உனைப்பெயர் பகர்பவர் கேட்கின் றாரொடு
       முரைப்பரும் புகழ்ச்சிவ ஞான தேவனே.
(91)