முகப்பு தொடக்கம்

மூக்கிடை யிரண்டு விழிகளே றுதன்முன்
        முடங்குகைக் கோலொரு காலா
    முன்னநின் றிருவாய் மலர்ந்தருள் செய்த
        முதிர்கலைப் பொருள்படித் தவராய்க்
கார்க்கடன் முகட்டி னிரவிவந் தெழுமுன்
        கடிதுசென் றணிமலர் கொய்துன்
    கழற்கிடார் பிறப்பி னாய்ப்பிறப் பினிது
        கற்றவ ரிகழ்ந்திடா மையினால்
நோக்கற நோக்கு முருவமே நாவா
        னுகர்ந்திடா வினியபே ரமுதே
    நுதல்விழிக் கனியே கறைமிடற் றரசே
        நுவலரு மாயையிற் பிறவா
யாக்கைய துடைய வருட்பெருங் கடலே
        யெழுந்தொடுங் காதவான் சுடரே
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(5)