|
மெய்ப்படிம மேவியடி மைக்குரிமை யாராய் மெய்ச்செயலி லாதவரு நற்றவரெ னாவோர் பொய்ப்பெயர்கொள் வாரெனினு மெய்ப்பெயர ராயே புக்குதவு நீயெமது சிற்றிலென வோர்பேர் வைப்பவளி யாதிதையு மக்கடலை மீதே வைக்குமடி யாலிவண ழித்தலற மாமோ செப்பரிய வாய்மையிறை சிற்றில்சிதை யேலே சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.
|
(8) |
|