முகப்பு
தொடக்கம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
மேவரு மெய்ச்சிவ ஞானி திருப்புகழ் மேன்மை யிசைத்திடுநாள்
மாவுர கர்க்கிறை தானொளிர் பைத்தலை மரண வசைக்குமதால்
பூவசை வுற்றிடு மாலென மட்டவிழ் பூமிசை யுற்றிடுவான்
பாவின் வியப்புறு மேரு முதற்கிரி பார மியற்றினனே.
(64)