|
மனமெனும் வயமா வென்வயப் படாமன் மயங்குறு மைம்புல வீதி மறிபடா தோடு கின்றது முறையோ மறித்ததை நிறுத்தியென் றனக்கு நினையல துதவு வாரிலை யதனா னினைப்பர வுற்றன னதனை நிறுத்திநீ யிவர்ந்து பின்னர்நீ வேண்டு நெறிகளிற் சென்றிட விடுவாய் கனலுறு மெழுகி னெஞ்சநெக் குடைந்து கரையில்பே ரன்பெனும் வெள்ளங் கண்வழி புறப்பட் டென்னநீர் வாரக் காலங்க டொறும்வழு வாமல் இனமலர் தூவு மடியவ ருள்ளத் திருள்கெட வெழுந்தபே ரொளியே இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(3) |
|