|
மறம், பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
வாரா யரசன் றூதனென வந்த வொருவ யாமகந்தை மலையை யுடைக்குஞ் சிவஞான வள்ளன் மயிலைக் குறவர்காண் ஏரா ரெங்கள் குலமகளை யின்று கேட்ப நினைவிடுத்த விறைவன் றிருக்கா ளத்தியிடை யெங்கண் மிச்சின் மிசைந்தவனால் சீரா ரெயிறு தரளமெனச் சிதற வடிபட் டுழல்கின்றோன் சிறிய குலத்திற் பிறந்தவனோ செந்தாண் மலராற் றேய்ப்புண்டு பாரா ரறிய வுடல்குன்றிப் பகற்போ தெல்லாம் புறப்பட்டான் பழைய குடியிற் பிறந்தவனோ பகரா யுள்ளம் வெருவேலே.
|
(10) |
|