|
பதினான்குசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
விற்ற தார்கலை பாதி யோடுவ னத்தி லேயழ விட்டதார் வெஞ்சி றைப்புக விட்ட தார்துகி லூரிய விட்டுவி ழித்ததார் உற்ற தாரமும் வேண்டு மென்றினி மன்னர் பெண்கொள லொண்ணுமோ வுமிய டாமண மென்ற வாய்கிழித் தோலை காற்றிலு ருட்டடா வெற்றி யாகிய முத்தி தந்தருள் வெங்கை மாநகர் வேடர்யாம் விமல ரானவ ரெமைய டுத்தினி தெங்கண் மிச்சின்மி சைந்தபின் பெற்ற வேலர்த மக்கு யாமொரு பெண்வ னர்ப்பினி லீந்தனம் பெற்ற பிள்ளைகொ டுப்ப ரோவிதென் பேய்பி டித்திடு தூதரே.
|
(101) |
|