|
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரண னுரையெனு மாரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேத மோதின் விழிநீர் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகா லோதிற் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுந ரன்றி மன்பதை யுலகின் மற்றைய ரிலரே.
|
(4) |
|