|
தலைவி முன்செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல் |
|
வேலையிற் றோன்றுநஞ் சுண்டோன் றிருவெங்கை வெற்பிலளி சோலையிற் பாடுமெம் மூர்புகு வீரிது சொன்மினறு மாலையிற் றோன்றுங் கதிர்வே லவனொடு மாவழங்கு பாலையிற் போயின மாதுவந் தாளென்று பாங்கியர்க்கே.
|
(353) |
|