|
வேண்டுநின் னடியார் மெய்யன் பெனக்கும் அருள்செய் சிவனே யலந்தே னந்தோ முறையோ முறையோ விறையோ னேயென் றழுது செம்பொ னம்பலக் கூத்தன் அருளாற் பெற்ற வன்பினி லொருசிறி தடிய னேற்கு மருளல் வேண்டு நீயே கோட னின்னருட் பெருக்கிற் கேற்ற தன்றிள வேறுகந் தேறியைப் பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக திருந்திய வேதச் சிரப்பொருண் முழுதும் பெருந்துறை யிடத்துப் பெருஞ்சீர்க் குருந்துறு நீழலிற் கொள்ளைகொள் வோயே.
|
(20) |
|