முகப்பு தொடக்கம்

வங்கையர் முத்த சங்கையர் சென்ன
        வசவண ரசகணர் வீர
    மாச்சையர் பிப்ப பாச்சையர் வள்ள
        மல்லையர் கல்லைய ரெங்கள்
சங்கண வசவ ராசையர் சேட
        தாசையர் சங்கர தாசர்
    சவுண்டைய ரென்றிங் கிவரடிக் கேவ
        றலையினாற் செய்யுநா ளுளதோ
பங்கய மலரோ டரிவிழி பரித்த
        பதமலர் சிவப்பவே னெடுங்கட்
    பரவைதன் மனைக்கட் சுந்தர னேவும்
        பணியெலா முனிவற வியற்றி
எங்கணும் விளங்க நம்பியா ரூர
        னேவல னெனப்படு மிறையே
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(10)