|
வந்துபிற கடவுளர்க டமையுரைத் துமைகாண மணிமன்று ணடமாடுமா மணியையிகழ் பரசமய நிலைகுலைய வென்றறையும் வன்றிறற் பறைய தென்னச் சிந்தைகவ ருந்துயர் விளைத்துவரு காமமொடு சினமென்னும் வெம்புலிக்குந் தீராத வாணவப் பேரிருட் குந்தனி தெழிக்குநெய் தற்பறை யென நந்தலரு மறிவென்னு மோரிளங் கன்னியை ஞானவடி வான பிரம நன்மணம் புணர்கின்ற மங்கலப் பறையென்ன நற்றவக் குன்ற மேநீ செந்தளிரி னெழில்வென்ற நின்றிருக் கையினாற் சிறுபறை முழக்கி யருளே சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே சிறுபறை முழக்கி யருளே.
|
(2) |
|