முகப்பு தொடக்கம்

 
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வலந்திரி கதிர்கா ணுலகின ரெல்லாம்
       வந்துகேட் பனவிலை யெனாத
நலந்தரு மொருநீ தமியனேன் கேட்ப
       நானல திலையெனத் திருவாய்
மலர்ந்துரை செய்த தென்கொலோ வறியேன்
       மயிலைமால் வரைமணி விளக்கே
புலந்தெறு வீரர் பெருமவென் றிறைஞ்சிப்
       புகழ்சிவ ஞானதே சிகனே.
(5)