|
வலமழு வுயரிய நலமலி கங்கை நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல் முகந்துல குவப்ப வுகந்தமா ணிக்க வாசக னெனுமொரு மாமழை பொழிந்த திருவா சகமெனும் பெருநீ ரொழுகி ஓதுவார் மனமெனு மொண்குளம் புகுந்து நாவெனு மதகி னடந்து கேட்போர் செவியெனு மடையிற் செவ்விதிற் செல்லா உளமெனு நிலம்புக வூன்றிய வன்பாம் வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி வளர்ந்து கருணை மலர்ந்து விளங்குறு முத்தி மெய்ப்யன் றருமே.
|
(16) |
|