பக்கம் எண் :

2431.

     அருள்வடி வான மருந்து - நம்முன்
          அற்புத மாக அமர்ந்த மருந்து
     இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
          கின்ருரு வாக இருந்த மருந்து. நல்ல

உரை:

     இறைவன் அருளே யுருவாய் அமைந்தவ னென்ப துபற்றி; “அருள் வடிவான மருந்து” என்று கூறுகிறார். சிவஞானம் தோன்றிப் பெருகப் பெருகப் பசுபாசமாகிய இருள் நீங்குவது விளங்க, “இருளற ஓங்கும் மருந்து” என்று இசைக்கின்றார்.

     (1)