2435. தானது வாகு மருந்து - பர
ஞான வெளியில் நடிக்கு மருந்து
மோன வடிவா மருந்து - சீவன்
முத்த ருளத்தே முடிக்கு மருந்து. நல்ல
உரை: நான் அதுவாதல் - சிவோகம்பாவனையாற் சிவமாதல். ஞான வெளி - ஞானாகாயம்; சிதாகாசம் என்று பெரியோர் கூறுவது; சிதாகாசம், சிதம்பரம் என வழங்குகிறது. மோன வடிவம் - சின்முத்திரைக் கையனாய் ஆதலின்கீழ்க் கண்களை மூடிக்கொண்டு வாய் பேசாதிருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம். சீவன் முத்தர் - இவ்வுலகில் உடம்பொடு கூடியிருந்தே சிவஞானச் செயலுடையவர்கள். (5)
|