பக்கம் எண் :

2454.

     அளவைக் கடந்த மருந்து - யார்க்கும்
          அருமை யருமையருமை மருந்து
     உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்
          ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து. நல்ல

உரை:

     சிவயோக சிவஞான உபாயங்களால் பெறப்படும் சிவபரம் பொருளை “உளவிற் கிடைக்கும் மருந்து” என வுரைக்கின்றார். சிவத்தின் வேறாகப் பரமானது இல்லாமைபற்றி, “ஒன்றும் ஒப்புயர்வில்லாது உயர்ந்த மருந்து” என்று சொல்லுகிறார்.

     (24)