2458. அணிமணி கண்ட மருந்து - அருள்
ஆநந்த சுத்த வகண்ட மருந்து
பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
பேசா மருந்தென்று பேசு மருந்து. நல்ல
உரை: அணிமணி கண்ட மருந்து - அழகிய நீலமணி போன்ற கழுத்தையுடைய சிவனாகிய மருந்து. அகண்ட மருந்து - அளவிற் கடங்காத மருந்து. பிணி - பிறவிப்பிணி. பரம்பொருள் மனமொழிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகலின், இன்ன தன்மைத்தென்றும் எவராலும் சொல்ல வொண்ணாமைபற்றி “யார்க்கும் பேசா மருந்து” என்கின்றார். பேசும் மருந்து - சான்றோரால் ஓதப்படும் மருந்து. (28)
|