பக்கம் எண் :

2459.

     மூவர்க் கரிய மருந்து - செல்வ
          முத்துக் குமாரனை யீன்ற மருந்து
     நாவிற் கினிய மருந்து - தையல்
          நாயகி கண்டு தழுவு மருந்து. நல்ல

உரை:

     மூவர், அயன், திருமால், அரன், முத்துக் குமாரன், புள்ளிருக்கு வேளூரிற் கோயில்கொண்டிருக்கும் முருகப் பெருமான். தையல் நாயகி - புள்ளிருக்கு வேளூரில் உமாதேவிக்கு வழங்கும் பெயர்.

     நல்ல மருந்திம் மருந்து - சுகம்
     நல்கும் வைத்திய நாத மருந்து.

     (29)