2505. கண்மூன் றுடையான் எவன்அவனே
கடவுள் அவன்தன் கருணைஓன்றே
கருணை அதனைக் கருதுகின்ற
கருத்தே கருத்தாம் அக்கருத்தை
மண்மூன் றறக்கொண் டிருந்தவரே
வானோர் வணங்கும் அருந்தவராம்
....... ......... ......... ...........
........... ........... ............... ...........
உரை: மூன்று கண்களை யுடையவன் எவனோ அவனே கடவுளாவான்; அவனது அருளொன்றே திருவருளாகும்; அதனை நினைக்கின்ற நினைவே நன்னினைவாம்; மண்ணாசை முதலிய மூன்று ஆசைகளையும் முற்றவும் கெடுத்து அந்நினைவைக் காண்டிருப்பவரே தேவர்கள் வணங்கும் அரிய தவமுடையவராவர் .............. எ.று
இப்பாட்டின் எஞ்சிய பகுதியும், பிற பாட்டுக்களும் இறந்தன..
(4)
|