27
27. மங்களம்
சிந்து
2564. புங்கவர் புகழுமா தங்கமு கந்திகழ்
எங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம்.
உரை: உயர்ந்தோர் போற்றிப் புகழும் யானை முகத்தால் ஒளிர்கின்ற கணேசப் பெருமானாகிய மேலோனுக்கு மங்களம் உண்டாகுக. எ.று.
புங்கவர் - உயர்ந்தவர். மாதங்கம் - யானை. துங்கன் - மேலோன். தெய்வங்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவ ராதலின், “கணேசராம் துங்கன்” என்று கூறுகின்றார்.
|