பக்கம் எண் :

2851.

     தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
     சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, சூரியன் ஒளி நிறமாய் எங்கும் நிறைந்த சிவத்தின் ஒளி மயமாக விரும்புகின்றேன், காண். எ.று.

     சிவவொளியைச் சிவ சூரிய வொளி என்று பெரியோர் வழங்கும் மரபு பற்றித் “தேசு நிறமாய் நிறைந்த சிவமயம்” எனத் தெரிவிக்கின்றார். தேசு - சூரியன்; ஒளிப் பொருள் என்றுமாம்.

           இதனால், சிவம் சூரிய வொளி மயம் என்பதாம்.

     (5)