பக்கம் எண் :

2860.

     நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
     ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, நான் அந்தச் சிவமாய் நிற்குமாறு அமைந்த ஞான நெறியை அறிவிப்பாயாக. எ.று.

     நான் அதுவாதலாவது - நான் என்னும் ஆன்மா சிவமாந் தன்மை யடைதல். அதற்குரிய நெறி சிவஞானச் செந்நெறி என்பது பற்றி, “ஞான நெறி சொல்லு” என வேண்டுகின்றாள்.

     (14)