2861. ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
உரை: வெண்ணிலவே, உணர்வுருவாகிய என்னை என்னுடைய இயல்புகள் அனைத்தையும் நானே அறியுமாறு உரைப்பாயாக. எ.று.
என் இயல்புகளையும் எனக்கும் சிவத்துக்குமுள்ள தொடர்பையுப் இனிதறிந்து உய்தி பெறச் சொல்லுக என்பாளாய், “என்னை நான்றியச் சொல்லு கண்டாய்” என வேண்டுகின்றாள். “நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை யாண்டிலனே” (கோத்தும்) என்பது திருவாசகம். (15)
|