பக்கம் எண் :

2865.

     அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
     ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, தில்லையம்பலத்தில் சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றா ரென்றோ; அவர் அங்ஙனம் ஆடுவதன் கருத்து என்னையோ, இயம்புக. எ.று.

     தில்லையம்பலத்தில் சிவன் கூத்தாடுவது படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் நடத்தற் கெனவும், உயிர்கள் மலமாயை கன்மங்களின் நீங்கிச் சிவப் பேறெய்தற் கெனவும் சான்றோர் கூறுவர். ஐந்தொழிற் கூத்து உன் நாடகம் எனவும், சிவப் பேற்றுக்குரிய கூத்து ஞான நாடகம் எனவும் வழங்கும். “ஊனை நாடக மாடு வித்தவா உருகி நானுனைப் பருக வைத்தவா ஞான நாடகமாடு வித்தவா நைய வையகத்துடைய விச்சையே” (சதக.) என்று திருவாசகம் உரைப்பது காண்க.

     (19)