பக்கம் எண் :

2871.

     எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
     உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.

உரை:

     தோழனே, நினக்கு மாறாக எள்ளத்தனைத் தீங்கு மனம் நினைக்கினும் நினையுந் தோறும் எய்தக் கடவ துன்பத்தை உள்ளத்தில் எண்ணினால், அது நெஞ்சிற் பாய்ந்து உடம்பெங்கும் ஊடுருவி நின்று வருத்துகிறது. எ.று.

     எள்ளேதம் - எள்ளளவான தீமை. எண்ணுதலும் தீவினையாய்த் துன்பம் விளைவிப்பதாகலின், “அதை உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுது” என உரைக்கின்றார்.

     (2)