பக்கம் எண் :

2875.

     கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்
     ஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.

உரை:

     மிகப் பெரிய கொடியவன் என்று பலரால் பேசப்படும் கொடுமையையுடைய யான் மேலே சொன்ன குற்றங்களை நினைத்தால் ஓ, என் நெஞ்சினுள் வருத்தம் ஊடுருவிச் செல்கிறது, காண். எ.று.

     கொடுமை மிகுதி விளங்கக் “கோகோ எனும் கொடியேன்” எனக் கூறுகிறார். செய்த குற்றங்களை நினைவு கூர்ந்து எண்ணுவோமாயின் குற்றத்தின் கொடுமையும், விளைவின் மிகுதியும் நெஞ்சை வருத்துமாதலின், “ஓகோ நினைக்கி லெனக் கூடுருவிப் போகுதடா” எனவுரைக்கின்றார்.

     (6)