பக்கம் எண் :

2886.

     ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்
     ஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா.

உரை:

     ஒப்பில்லாத பெருமை கொண்ட தாயினும் இனிய பெருமானே, உன்னுடைய தண்ணிய அருட்டிருமுன்பு யான் பிணங்கிப் பேசிய சொற்களை நினைக்கின் எனது மனம் உருகிறது. காண். எ.று.

     உலகுயிர்கட்க்குத் தாயினும் சிறந்த அன்புருவாய உறவு வேறின்மையின், “ஈடில் தாய்” எனவும், அன்பாற் பெருமை மிக்கமையின், “பெருந்தாய்” எனவும் இயம்புகின்றார். தாயிற் சிறந்த தயா வுடையனாதலால், “தாயில் இனியாய்” என்கின்றார். பிறவி வெம்மையால் வருந்துவோர்க்குத் தண்ணிய திருவருள் திருமுன் இன்பமும் சாந்தமும் தழைத்து நிலவுதல் இயல்பாக மாறுற்றுப் பிணங்குவது குற்றமாதலை நினைக்கையில் நெஞ்சம் மிகவும் வருந்துவது புலப்படுத்தற்கு “உள்ளம் உருகுதடா” என்று இசைக்கின்றார்.

     (17)