பக்கம் எண் :

2941.

     நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
     புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா.

உரை:

     தன் திருமுன் போந்த மெய்யன்பர்களுக்கு அன்புறவு மீதூருமாறு அம்பலத்தில் ஆடல் புரிகின்றாயாயினும், புண்ணியப் பொருளாகிய பெருமானே, உன்னுடைய அழகிய திருவடி நோவதில்லையோ. எ.று.

     திருமுன் என்பது அவாய் நிலையால் வந்தது. மெய்யன்பர் - மெய்ம்மை சான்ற அன்பர்கள். மெய் யன்பு காரணமாக நண்ணினவர்க்குத் தனது ஆடற் காட்சி அந்த அன்பு மேன்மேலும் மிகச் செய்கிறதென்பார், “நயக்க மன்றில் ஆடுகின்றாய்” என நவில்கின்றார். நயத்தல் - காதலித்தல். புண்ணியம், புண்ணியன் - விளைவிக்கும் பொருளாயவன்; புண்ணியவுருவினன் என்றுமாம்.

     (3)