2946. எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா.
உரை: எல்லா மக்களும் இன்பத்திலே திளைக்குமாறு திருக்கூத்தாடுகின்றாயாயினும், வல்லவர் அனைவருக்கும் வல்லவனாகிய உனக்கு உன் மலர் போன்ற திருவடிகள் நோவதில்லையோ. எ.று.
தனது திருக்கூத்தால் மக்கள் மலவிருளின் நீங்கிப் பேரின்பம் பெறுவிக்கின்றானாதலால், “எல்லாரும் இன்புற்றிருக்க நடம் ஆடுகின்றாய்” என்று கூறுகின்றார். வரம்பில் ஆற்றலுடையவன் என மெய்ந்நூல்கள் உரைத்தலால், “வல்லாரின் வல்லாய்” எனப் புகழ்கின்றார். (8)
|