2954. பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்
அற்புதப்பொற் சேவடிக்கே அன்புறைத்தேன் ஐயாவே.
உரை: ஐயனே, அழகு மிக அழியாத இன்ப ஞானப் பொருளை நல்குமென்று எண்ணியே அம்பலத்தில் விளங்கும் அற்புதமான அழகிய சிவந்த திருவடிக்கண் அன்பு கொண்டேன். எ.று.
பொற்பு - சிவப் பொலிவு. பொன்றாப் பொருள் - சிவஞானம் நல்கும் மெய்ப்பொருள். மெய் எக்காலத்தும் அழிவதில்லாமையால் “பொன்றாப் பொருள்” எனப் புகல்கின்றார். அம்பலவாணன் திருவடி ஞானம் சிவஞானமாய்ச் சிவபோகம் தருவதாகலின், “மன்றில் அற்புதப் பொற் சேவடி” எனச் சிறப்பிக்கின்றார். (5)
|