பல
பல்லவி யெடுப்பு (அனுபல்லவி)
2965. நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்க டி. கொம்மி
உரை: பொன்னம்பலவாணன் - தில்லைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளும் சிவபெருமான். நாடுதல் - நினைதல். பதம் - திருவடி. பதம் பாடுதல் எனக் கொண்டு அகப் பொருள் நெறியிற் பாட்டுக்களையமைத்துப் பாடுதல் என்றும் கொள்ளப்படும். (2)
|