பக்கம் எண் :

33. தெண்டனிட்டேன்

சிந்து

பல்லவி

2977.

     தெண்டனிட்டே னென்று சொல்லடி - சுவாமிக்குநான்
          தெண்டனிட்டே னென்று சொல்லடி.

உரை:

     தோழி, தலைவரிடம் சென்று நான் அவரை வணங்கி வழிபட்டேன் என்று சொல்வாயாக. தெண்டன், வணக்கம்; அடியற்றமரம் போல் வீழ்ந்து வணங்குதல்.

     இது தோழியைத் தலைவனிடம் தூதனுப்பும் தலைவி சொல்லுவதாம்.

     (1)