பல
பல்லவி யெடுப்பு
2978. வண்டலை விளக்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு ( தெண்ட )
உரை: தண்டலை - சோலை. தில்லைத் தலம் - தில்லைப் பெருங்கோயில். வேடம் கட்டியாடுதல் - சிவ வேடம் பூண்டு ஆடுவது. அகள நிலையில் சிவத்துக்கு உருவமில்லை; சகளத்தில் சடை முடியும் திருமுகமும் எண் தோளும் கொண்ட சிவனுருக் கொண்டு பாம்பு மாலையும் தோலாடையும் பூண்டு கால்களிற் கழலணிந்து ஆடுகின்றாராதலின், “வேடம் கட்டி யாடுகின்றவர்” என விளம்புகிறாள். (1)
|