பக்கம் எண் :

2980.

     இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
          ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
     பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
          பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்கு ( தெண்ட )

உரை:

     இழிந்தால் - பிறப்பால் தாழ்வுற்றாலும், ஏற்றுவார்-உயர்த்துவார். இழிய வைப்பார் - இளையான்குடி மாறனாரைப் போல வறுமையில் ஆழப் புதைய வைப்பார். பசப்புதல் - ஈண்டு மயக்குதல் மேற்று. பண்டம் பறித்தல் - பொருள்களை இழக்கச் செய்தல்.

     (2)