2989. முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
முறையோ - முறையோ - முறையோவென் றலறவும்
( இன்னந் )
உரை: அறிவறியாப் பருவத்திற் செய்த குற்றத்தைப் பொறுத்தருளினாய் என்பாராய், “முன்னம் பிழை பொறுத்தாய்” எனக் கூறுகிறார். முன்பு பொறுத்தது போல இப்போதும் பொறுப்பது முறையாம் என்பது கருத்து. (3)
|