4285. துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
காணாது போய்ப்பழி பூண்பாயோ தோழி.
உரை: துரியத்துக்கப்பாலும் தோன்றும் பொது என்பது துரியாதீதத்தில் திருவருட் காட்சிக்குப் பொருளாய்த் தோன்றும் ஞான சபை. சோதித் திருநடம், திருவருட் சிவஞானப் பேரொளி திகழும் ஞான நடனம். கரியைக் கண்டாங்கு - பிறவிக் குருடர் யானையின் ஒவ்வோர் உறுப்பைக் கண்டு குறையறிவால் தம்மிற் கலாம் விளைத்தது போல ஆன்மா சிற்றறிவுடையதாகலின், “சிறுமையுறக் காண்பாயோ” எனத் தலைவி ஐயுறுகின்றாள். (10)
|