4288.
வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே நல்லநாள் எண்ணிய நாள்.
உரை:
வரம்பிலாற்றல் உடையவனாதலால் சிவனை, “எல்லாமும் வல்லான்” என இயம்புகின்றார். நல்ல நாள் - நன்மை விளைவிக்கும் நாள். (2)
(2)