4291. தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய்.
உரை: கண்டு வணங்குதற்கும் அவனது அருட் பேற்றுக்கும் யாதொரு தடையும் இல்லாதவன் என்றற்கு, “தடை யாதும் இல்லாத் தலைவன்” என வுரைக்கின்றார். தன்னைத் தடுக்க வல்லவர் ஒருவரும் இல்லாதவன் எனினும் பொருந்தும். (5)
|