பக்கம் எண் :

4295.

     தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
     தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
     தத்துவ முன்னுவ தேன்.

உரை:

     தத்துவங்கட்கெல்லாம் வேறாய், மேலாயவனாகிய சிவ பரம்பொருளைக் காண்பவர் தத்துவங்களை எண்ணி ஆராய்வதால் பயனில்லை என்பதாம். முன்னுதல் - முற்பட வைத்து ஆராய்தல்.

     (9)